செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிப்ரவரி 5-இல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

02:53 PM Jan 07, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டது.

Advertisement

வேட்பு மனு தாக்கல் ஜனவரி 10ஆத் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதியும், மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதேபோல் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement
Tags :
delhi assembely electionerode east by electionFEATUREDMAIN
Advertisement