'பிரகதி' வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன - அண்ணாமலை
'பிரகதி' வலைதளம் மூலம் 205 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 340 உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த காலங்களில் நம் நாட்டில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள், 3 முதல் 20 ஆண்டுகள் வரை காலதாமதமாக நத்தை வேகத்தில் நடைபெற்று வந்ததாகவும், சில திட்டங்கள் எவ்வித காரணமும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட, 'பிரகதி' வலைதளம் மூலம் 205 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 340 உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
பிரகதி தளம் என்பது உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தடைகளை நீக்க உதவியதுடன், லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.