பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு உயர்த்தப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது எனவும்,
இந்த கடன் தொகை அதிகரிப்பு தொழில்முனைவோருக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் உதவும் வகையில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷூ என்ற பிரிவில் 50 ஆயிரம் வரையிலும், கிஷோர் என்ற பெயரில் 5 லட்சம் வரையிலும், தருண் என்ற பெயரில் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய வகை அறிமுகம் தருண் ப்ளஸ் என்ற பிரிவின் கீழ் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருண் ப்ளஸ் மூலம் 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறலாம் எனவும், ஏற்கனவே 10 லட்சம் வரையில் கடன் பெற்று திருப்பி செலுத்தியவர்களும் இதில் பயன் பெறலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.