பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ!
11:04 AM Jan 07, 2025 IST | Murugesan M
கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
கனடா பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும், கனடா மீது அதிகளவில் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், நாட்டின் பொருளாதார சூழல், சொந்த கட்சிக்குள் கடும் எதிர்ப்பு, பொதுமக்களிடம் ஆதரவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
மேலும், லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், நாட்டின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமராக தொடர்ந்து செயல்படுவதாக ட்ரூடோ அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement