பிரதமர் பார்னியருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி - கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு!
03:14 PM Dec 05, 2024 IST | Murugesan M
பிரான்ஸ் பிரதமர் பார்னியருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றது.
மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரான்ஸ் அரசு கவிந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற பார்னியேர், தமது பதவியை ராஜினாமா செய்தார்.
Advertisement
இதனையடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரான்ஸ் கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Advertisement
Advertisement