பிரதமர் மோடியுடன் அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் சந்திப்பு!
அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநரான துளசி கப்பார்ட், பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Advertisement
அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த துளசி கப்பார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், சர்வதேச உளவு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடனும் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் சந்தித்தார்.
அப்போது, பிரக்யாக்ராஜில் ஓடும் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட புனித நீரை பிரதமர் பரிசாக வழங்கினார். பதிலுக்கு, துளிசி மாலையை துளசி கப்பார்ட் நினைவு பரிசாக அளித்தார்.
பின்னர் இருவரும் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். அத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.