பிரதமர் மோடியுடன் துபாய் பட்டத்து இளவரசர் சந்திப்பு!
07:10 AM Apr 09, 2025 IST
|
Ramamoorthy S
இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
2 நாள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இந்தியா வந்தார். அவரை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார். தொடர்ந்து அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருநாடுகளின் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தவுமை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான செயல்திட்ட உறவை மேம்படுத்துவதில் துபாய் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement