செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

10:09 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

இந்திய வந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Advertisement

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், எப்போதும் போல் , பில் கேட்ஸுடனான சந்திப்பு  சிறப்பான வகையில் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement

வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிடடுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு சென்ற கேட்ஸ், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
Bill Gates meet modiFEATUREDFormer Microsoft CEO Bill GatesMAINprime minister modi
Advertisement