பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!
05:34 PM Feb 28, 2025 IST
|
Murugesan M
இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், பிரதமர் மோடியை சந்தித்தார்.
Advertisement
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், தனது குழுவினருடன் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
டெல்லியில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியம் இடையிலான உறவு குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடம், க்ரீன் எனர்ஜி, திறன், பாதுகாப்பு மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்துள்ள லியன், இரு தரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
Advertisement