பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் - நயினார் நாகேந்திரன்
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக ஒ.பி.சி. அணி சார்பில் தமிழகத்தில் ஓ.பி.சி பிரிவில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பாஜக ஓபிசி அணியின் தேசிய தலைவர் லட்சுமணன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ், தயாரிப்பாளர் கலைபுலி தானு, சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட 32 பேருக்கு சிறந்த ஆளுமைகான ஓ.பி.சி. விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், ஓ.பி.சி. ஆணையம் காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஓ.பி.சி ஆணையம் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஓபிசி பிரிவினர் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.