பிரபலமான காபி பட்டியலில் தமிழகத்தின் காபி !
உலகளவில் பிரபலமான காபி பட்டியலில் தழகத்தின் பில்டர் காபி 20வது இடம் பிடித்துள்ளது.
Advertisement
காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து முறை வரை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட காபி பல சுவையில் பல வகையில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நறுமணத்துடனும் ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு நிறத்திலும் இருக்கும். அதைப் பொறுத்து தான் எந்த காபி குடிக்கலாம் என்று தேர்ந்தெடுப்போம்.
அந்த வகையில் உலகளவில் பிரபலமான காபி பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச காபி தினத்தை முன்னிட்டு உலகின் மிக பிரபலமான காபிகளின் தரவரிசை பட்டியலை டேஸ்ட் அட்லாஸ் ( taste atlas ) வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தின் பில்டர் காபி 20 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இத்தாலியின் கேப்பச்சீனோ, காபியோலைட், வியட்நாமின் எக் காபி ஆகியவையும் இடம்பிடித்துள்ளது.