செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி மரணம் - திரைபிரபலங்கள் இரங்கல்!

10:03 AM Mar 25, 2025 IST | Ramamoorthy S

கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

Advertisement

தமிழ்நாடு வில்வித்தை சங்க நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளராக ஷிஹான் ஹுஸைனி இருந்து வந்தார். இளம் திறமையாளர்களை ஊக்குவித்து, தமிழ்நாட்டை இந்திய வில்வித்தையின் முன்னணி நிலையமாக உருவாக்க அவர் முக்கிய பங்காற்றினார். அண்மையில் அவருக்கு ரத்த புற்றுநோய் ஏற்படவே, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பிறகு அவரது சொந்த ஊரான மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளது.

Advertisement

ஷிஹான் ஹுஸைனி மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Tags :
actor Shihan Hussaini passed awayFEATUREDMAINTamil Nadu Archery Association.
Advertisement
Next Article