பிரிவினைவாதத்தை நிராகரித்து, ஜனநாயகத்தை வெற்றி பெற செய்த ஜம்மு காஷ்மீர் மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்!
அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைக் கையில் எடுத்து முழங்குபவர்களே அதை அதிகம் அவமதித்ததாக காங்கிரஸை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகின் மிக உயர்ந்த சிலையான படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு பின் ஒரே தேசம், ஒரே அரசியலமைப்பு சட்டம் என்ற கனவு நனவானதால் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
70 ஆண்டுகளாக நாடு முழுவதும் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்றும், அந்த சட்ட புத்தகத்தை இன்றைக்கு கையில் தூக்கி முழங்குபவர்களே அதை அதிகமாக அவமதித்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஜம்மு- காஷ்மீரில் முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தின் பெயரில் அதன் முதலமைச்சர் பதவியேற்றதாக கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் அந்த சட்டத்தை வகுத்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
பிரிவினைவாதத்தை நிராகரித்து, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்ததார்.