செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிருத்வி சேகரின் டென்னிஸ் பயணம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் - அண்ணாமலை

01:02 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

பிருத்வி சேகரின் பயணம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிப்பதாகவும்,  விளையாட்டில் சிறந்து விளங்குவதில் ஊனம் ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழக பாஜக  மூத்த தலைவர்களுடன், பிருத்வி சேகரையும் அவரது குடும்பத்தினரையும் று சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

டென்னிஸில் அவரது பயணம் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் காது கேளாதோர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்றது குறித்து விவாதிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisement

பிருத்வி சேகரின் பயணம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்குவதில் ஊனம் ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalaiannamalai greetingsAustralian Open Deaf Tennis Championships Singles titleMAINPrithvi Sekhar
Advertisement