பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
ஜி-20 மாநாடு நிறைவு பெற்றதும் பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
Advertisement
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஜி-20 மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பிரேஸில் அதிபர் லூலா டா சில்வாவை சந்தித்தார். அப்போது எரிசக்தி, உயிரி எரிபொருள், பாதுகாப்பு, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவது என தலைவர்கள் இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.
இதேபோல கடந்த ஆண்டில் இந்தியா ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நிலையில், பிரதமர் மோடியிடமிருந்து கிடைத்த உத்வேகத்தின் மூலம் நிகழாண்டு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக பிரேஸில் அதிபர் லூலா டா சில்வா தெரிவித்தார்.
இதேபோல் பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டில் மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல பிரிட்டனின் பெல்ஃபாஸ்ட் மற்றும் மான்செஸ்டர் நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.