செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பில்கேட்ஸ் புது பிசினஸ் குறைந்த செலவில் அணுமின் நிலையம்!

08:05 PM Jun 18, 2024 IST | Murugesan M

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தூய்மையான ஆற்றல் பங்களிப்பை செய்யும் ஒரு புதிய குறைந்த செலவிலான அணுசக்தி உலைகளை அமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் பில்கேட்ஸ். இது பற்றி தற்போது பார்க்கலாம்...!

Advertisement

உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பலர் பலவிதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கிவரும் நிலையில், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸும், ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்கி இருக்கிறார். டெர்ராபவர் TEERA POWER என்னும் அந்த ஸ்டார்ட் அப் ஒரு அணு உலை என்பது தான் ஆச்சரியமான செய்தி.

குறைந்த செலவிலான அணுஉலைகளை உருவாக்கும் நிறுவனங்களில் பில் கேட்ஸின் டெர்ராபவர் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.

Advertisement

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள வயோமிங்கில் தனது முதல் வணிக அணு உலையைக் கட்டத் தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே அந்த இடத்தில் இருந்த நிலக்கரி ஆலை மூடப்பட்ட நிலையில், டெர்ராபவர் Natrium reactor அணு உலை அமைகிறது.

இதற்கான REACTORS உற்பத்தி செய்யும் தொழிற் சாலை , அமெரிக்காவின் (NORTH Seattle) வட சியாட்டலில், 65,000 சதுர அடிகள் பரப்பளவில் TerraPower- ன் ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தியை உருவாக்குவதற்கான புதிய பொருட்கள் மற்றும் அதிநவீன முறைகளை பரிசோதிப்பதற்கான நிலையங்களின் தொகுதிகளாக இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

டெர்ராபவர், தனது Natrium அணு உலையின் உற்பத்தி சான்றிதழுக்கான விண்ணப்பத்தை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்து உள்ள நிலையில் , டெர்ராபவரின் தலைமை செயல் தலைவரான கிறிஸ் லெவெஸ்க், தனியார் முதலீடு மட்டுமில்லாமல், அமெரிக்க அரசின் முதலீடும் உள்ளதால், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி நிச்சயம் கிடைத்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உலகம் வேகமாக வெப்பமடைந்து வரும் ஆபத்தான கால கட்டத்தில், அணுமின் தேவை மிகவும் அவசியமானது. மேலும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அணுசக்தி முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணுமின் நிலையம் 24 மணி நேரமும், கார்பன் இல்லாத ஆற்றலை வழங்குவதோடு, காற்று மற்றும் சூரிய ஒளியில் இருந்து வரும் இடைப்பட்ட சக்தியையும் மேம்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.

மேலும் Natrium அணு உலை, 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் 400,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமானதாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் நம்பகமான, ( ZERO CARBON ) கார்பன் துளியும் இல்லாத ஆற்றலை உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை அணு உலையில் தண்ணீருக்குப் பதிலாக திரவ சோடியத்தை குளிரூட்டியாகப் பயன்படுத்துவதும், வெளியீட்டை அதிகரிக்க வெப்பச் சேமிப்பிற்காக உருகிய உப்பைச் சேர்ப்பதும் என்று புதிய முறையை டெர்ராபவரில் பயன்படுத்தப்படுகிறது.

இது காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் அதே நேரத்தில், இந்த TerraPower இன் Natrium அணு உலை, மின் ஆற்றலில் அமெரிக்காவின் சுயசார்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் , அணு உலைக்கான எரிபொருள் ரஷ்யாவிலிருந்து வரவேண்டும் என்றும், உக்ரைன் போர் காரணமாக , அது தடைபட்டுள்ளது என்பதால், இந்த அணுஉலை 2028 ஆம் ஆண்டு ,முழு வேலையைத் தொடங்கும் என பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த டிசம்பர் மாதம் ஐக்கியஅரபு அமீரகத்தின் அரசின் Emirates Nuclear Energy Corporation (ENEC) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் எளிமையான மற்றும் மலிவான அணு உலைகளை அமைப்பதற்கான ஆராய்ச்சிகளைச் செய்து வந்த டெர்ராபவர் நிறுவனம், 2030 ஆம் ஆண்டுக்குள் புதிய உலையில் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

Natrium அணுமின் உலை, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், நம்பகமான பூஜ்ஜிய கார்பன் மின்சாரம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளுடன் அணுசக்தியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று உலகமே எதிர்பார்க்கிறது.

Advertisement
Tags :
Bill Gates New Business Low Cost Nuclear Power Plant!FEATUREDMAIN
Advertisement
Next Article