பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக தவறான அறிக்கை - நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
12:54 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Advertisement
வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, குடிநீர் விநியோக மையங்கள் போன்றவை செயல்படவில்லை என்றும், பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
Advertisement
மேலும் பிப்ரவரி 4ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement