செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பி.எஸ்சி., பி.சி.ஏ. மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்!

01:19 PM Jun 06, 2024 IST | Murugesan M

ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடிஎம் ப்ரவர்த்தக் இணைந்து பி.எஸ்சி., பி.சி.ஏ. மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

ஐஐடி மெட்ராஸ் ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம், மாணவர்களுக்கு தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க புதிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்/ உள்கட்டமைப்பு மற்றும் தகவல் உதவிமையம் போன்றவற்றுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். லைட்ஸ்ரோம் (https://lightstorm.net/) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம்பெறும். பயிற்சி பெறும் மாணவர்களை ஐஐடிஎம் ப்ரவர்த்தக் தேர்வு செய்து, அவர்களுக்கு மேற்கண்ட அம்சங்களில் தொழில்துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளித்து தயார்படுத்தும்.

இந்த பயிற்சித் திட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன்12 ஆகும். விருப்பமுள்ள மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். https://forms.gle/7RhAKgrGRgwr17zd6

ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் என்பது சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள் பற்றிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான ‘பிரிவு 8’ நிறுவனமாகும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில், பல்துறை சைபர்-இயற்பியல் அமைப்புகள் பற்றிய தேசிய இயக்கத்தின் கீழ் நிதியுதவி செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐஐடி மெட்ராஸ் செய்து வருகிறது.

இம்முயற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்த ஐஐடி மெட்ராஸின் தகைசால் பேராசிரியர் மங்கள சுந்தர், “கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் அவர்களுக்கு திறன்களை வளர்ப்பது எங்களது கடமை.

வாடிக்கையாளருக்கு சிறந்த ஆதரவையும் சேவையையும் வழங்க பங்கேற்பாளர்களைத் தயார்படுத்தும் விரிவான பயிற்சி அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியாகும்.

இத்திட்டம் பரந்த அளவிலான தொழில்நுட்ப, வாடிக்கையாளர் சேவை சிக்கல்களைத் திறமையாகவும் திறம்படவும் கையாள்வதற்குத் தேவையான திறன்களையும் ஆற்றலையும் வழங்குவதுடன், பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளைக் கையாளவும் பயிற்றுவிக்கப்படும்” என்றார்.

இத்திட்டம் பற்றிய சில விவரங்கள்

பயிற்சி முற்றிலும் இலவசம், பயிற்சிக்கான காலம் 3 மாதங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

வகுப்பு அடிப்படையிலான பயிற்சித் திட்டமாக இருக்கும். பாடநெறியின் உள்ளடக்கம்- நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள் மற்றும் தனித்திறன்கள்.

தேவைப்படும் தகுதிகள்- 2023, 2024 பிஎஸ்சி தேர்ச்சி (தகுதியான பாடத்திட்டம்- கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரித் தொழில்நுட்பம், பிசிஏ மாணவர்கள், குறைந்தபட்சம் 60% சராசரி மதிப்பெண்கள்

பயன்கள்- சிறிய அளவிலான, நடுத்தர அளவிலான நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப உதவிப் பிரிவில் சேருவதற்கு மாணவர்களைத் திறமைப்படுத்துதல் மாணவர்களின் இருப்பைத் தெரிவிக்கும் வகையில் மாதிரி நேர்காணல்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பு உதவி வழங்கப்படும்.

வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லை என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
தற்காலிக தொடக்க நாள்- ஜூன் 2024 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
B.C.A. Free training program for students!B.Sc.MAIN
Advertisement
Next Article