பீகார் இடைத்தேர்தல் - 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி!
06:30 PM Nov 23, 2024 IST
|
Murugesan M
பீகார் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, 4 தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது.
Advertisement
பீகார் மாநிலத்தின் ராம்கர், தராரி, பெல்கஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி இந்த 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி தங்கள் வசம் இருந்த 3 தொகுதிகளை இழந்துள்ளது. முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 4 தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்து படுதோல்வி அடைந்துள்ளது.
Advertisement
Advertisement
Next Article