செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பீகார் சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு சர்ச்சை பேச்சு - அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

09:44 AM Jan 21, 2025 IST | Sivasubramanian P

பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து
தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.

Advertisement

அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி சபாநாயகர்கள் மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட
அப்பாவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்த தலைப்பில் உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்கலைக்கழக விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும், பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

Advertisement

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் அப்பாவு, மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

Advertisement
Tags :
Appavu walkoutBiharConstitution of IndiaGovernorMAINPatnaRajya Sabha Deputy Chairman Harivansh NarayanSpeakers' Conference
Advertisement
Next Article