புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 18ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு பரிந்துரைக்கும் 5 அதிகாரிகளில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உரிய நபரை தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.