புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு!
கனிமவள கொள்ளை தொடர்பான புகாரில் ஜகபர் அலி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே துளையானூரில் உள்ள ஆர்.ஆர்.கல்குவாரியில் சட்ட விரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாக ஆதாரத்துடன் புகார் அளித்த ஜகபர் அலி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கல்குவாரி உரிமையாளர், மினி லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜகபர் அலி புகார் அளித்திருந்த ஆர்.ஆர்.குரூப் நிறுவனத்திற்கு சொந்தமான திருமயம் அருகே துளையானூரில் உள்ள கல்குவாரியில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ட்ரோன் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர்.