புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்!
07:30 PM Jan 16, 2025 IST | Sivasubramanian P
புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Advertisement
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை பிடித்த வீரர்களுக்கு சில்வர் அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
வீரர்களின் கைகளின் சிக்காமல் வென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் மங்கன்தேவன்பட்டிக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
Advertisement
Advertisement