செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு - உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

09:16 AM Dec 29, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி சடலமாக மீட்பு - உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
annamalaiFEATUREDKarukakurichiMAINManikandanNursing student found deadPudukkottai
Advertisement