புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!
12:08 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.
Advertisement
குன்னத்தூரில் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளுக்காக வாய்க்கால் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கிடைக்கும் மண்ணை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்டதால் தன்னை அவர் ஆள் வைத்து அடித்ததாகத் தமிழரசன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement