புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!
புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
Advertisement
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நடைபெறுவது வழக்கம் அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது
இதில் திருச்சி புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்பதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது
ஜல்லிக்கட்டை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா கொடியாசித்து தொடங்கி வைத்தனர் முன்னதாக காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக டோக்கன்கள் வரிசைப்படி வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகின்றன.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான நிச்சய பரிசு அறிவிக்கப்படாத நிலையில், போட்டியை காண வருகை தரும் பிரபலங்கள் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி வருகின்றனர்.