For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று!

08:30 PM Jan 11, 2025 IST | Murugesan M
புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு hmpv வைரஸ் தொற்று

புதுச்சேரியில் 5 வயது சிறுமி ஒருவருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது.

Advertisement

சீனாவில் தற்போது எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று வேகமாறு பரவி வருகிறது. இதேபோல் கர்நாடகா, தமிழகத்திலும்  எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டடது.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்றழைக்கப்படும் இந்த தொற்று, மழைக்காலங்களில் பரவும் மற்ற வைரஸ் தொற்றுகளைப்போல காய்ச்சல், சளி, இருமல், சுவாச அசவுஹரியம், உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மற்றபடி உயிர் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதால், எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு போரிமேடு ஜிப்மர் மருத்துவமையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement