புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டல் - விலை பேசிய இயக்குநர்?
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டலை, நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் விலை பேசியதாக கூறப்படுகிறது.
Advertisement
திரைப்பட இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், தனது சொகுசு காரில் புதுச்சேரிக்கு சென்றார். அங்கு தலைமை செயலகத்திற்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார்.
அப்போது கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான "சீகல்ஸ்" ஹோட்டலை விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த அமைச்சர் லட்சுமி நாராயணன், "அது அரசு சொத்து" எனக்கூறினார்.
உடனே, "ஹோட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா" என விக்னேஷ் சிவன் கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஹோட்டல் இயங்கி வருவதால் அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது என அமைச்சர் மறுத்துவிட்டார்.