செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி : பள்ளிகளில் விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை!

12:45 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Advertisement

விடுமுறை தினங்களிலும் மாணவர்களுக்கு ஓய்வு அளிக்காமல் தொடர்ந்து பாடம் நடத்தப்படுவதாகவும், இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINPuducherry: Ban on conducting special classes on holidays in schools!
Advertisement