செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுச்சேரி : மீண்டும் பணி வழங்க கோரி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டம்!

05:25 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்  கைது செய்தனர்.

Advertisement

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

Advertisement

ஆனால் தற்போது வரை வேலை வழங்கவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நீதிமன்ற தீர்ப்பின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
Tags :
MAINPuducherry: Dismissed employees protest demanding reinstatementபுதுச்சேரி
Advertisement