புதுமை படைக்கும் கூகுள் தமிழில் ஜெமினி AI!
கூகுளின் AI ஜெமினி, இந்தியாவில் அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு
அந்நிறுவனம், ஜெமினி AI அசிஸ்டண்ட் செயலியில் புதிய அம்சத்தை, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஜெமினி AI செயலி, இனி ஆங்கிலம் மற்றும் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.Advertisement
அறிவியல் உலகில் கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு தொழில்நுட்ப மாற்றமும், மனிதகுல முன்னேற்றத்துக்கும்,வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இன்றைய உலகத்தில், Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. அனைத்து இடங்களிலும் , மக்களுக்கு அன்றாட செயலிகளில் தொடங்கி அசாதாரண செயல்களை செய்வது வரை இந்த AI பெரிய உதவியாக இருக்கிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு சந்தையில் OPEN AI, X-AI என பல நிறுவனங்கள் இருந்தாலும், கூகுளின் ஜெமினி AI முன்னணியில் இருக்கிறது.
கூகுள் ஜெமினி AI என்பது கூகுள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும். ஆங்கிலம் மற்றும் இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய ஒன்பது இந்திய மொழிகளில் இந்த ஜெமினி AI உருவாக்கப்பட்டுள்ளது. எனவே , இதனை பயன்படுவோர், எங்கு சென்றாலும் கூகுள் ஜெமினி AI உதவியாளருடன் தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சின்ன சின்ன வேலைகள் முதல் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் தீட்டுவது வரை, பல்வேறு பணிகளுக்காக இந்தியாவில் பலர் ஜெமினி AI-யைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், விருப்பமான மொழிகளில் தங்களின் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த ஜெமினி AI புதிய அம்சங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தட்டச்சு செய்வது, குரல் கட்டளைகள் இடுவது மற்றும் படப் பதிவேற்றங்கள் உள்ளிட்ட பல உள்ளீட்டு முறைகளால் பயன்படுத்துவோருக்கு, இந்த ஜெமினி AI, மொபைல் பயன்பாட்டில் புதிய அனுபவத்தைத் தரும் என்று தெரியவருகிறது.
தமது தேவைகளுக்கு ஏற்ப இந்த ஜெமினி AI உதவியாளரைபயன்படுத்திக் கொள்ளவும் இந்த புதிய செயலி இடம் கொடுக்கும்
ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் ஜெமினி AI செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலம் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட நினைவூட்டல்களை மேலும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அழைக்கச் சொல்வது என்று Google Assistant மூலம் கிடைத்த அத்தனை வசதிகளையும் Gemini AI செயலி மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும், ஆப்பிள் iOS பயன்படுத்துவோரும் , ஜெமினி AI செயலியைப் பயன்படுத்த முடியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுளின் மிகவும் திறமையான AI மாடலான, ஜெமினி அட்வான்ஸ்டு, இப்போது இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் செயல்படுகிறது. ள்ளடக்கத்தை செயலாக்கவும் புரிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது.
மொத்தமாக 1,500 பக்கங்கள் வரை, பெரிய ஆவணங்களைப் பதிவேற்றலாம் மற்றும் சுருக்கலாம் அல்லது 100 மின்னஞ்சல்களைப் பகுப்பாய்வு செய்யலாம் என்ற வகையில் ஜெமினி அட்வான்ஸ்டு AI, நுண்ணறிவுகளை திறமையான தகவல் செயலாக்கத்தை எளிதாக்குகிறது.
இந்த ஜெமினி AI பயன்படுத்துவோரின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் முக்கியமான அவர்களின் தகவல்களைப் பாதுகாப்பதற்கும் கூகுள் நிறுவனம் அதிக கவனம் எடுத்துக்கொள்வதாக கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
மொபைல் பயன்பாட்டில் AI ஒரு புதுமை. அதிலும் ஜெமினி AI மேலும் பல புதுமைகளைப் படைத்து வருகிறது.