புனரமைக்கப்பட்ட பழனி முருகன் கோயில் ராஜகோபுர யாழி சிற்பம் - கோலாகலமாக நடைபெற்ற இலகு குடமுழுக்கு விழா!
02:20 PM Oct 24, 2024 IST | Murugesan M
பழனி முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிற்பம் சேதமடைந்த நிலையில், அச்சிற்பம் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரத்திற்கு இலகு குடமுழுக்கு நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோயிலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ராஜகோபுரம், ஏழு மண்டபங்கள் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன.
Advertisement
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பழனி கோயில் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிலை சேதமடைந்தது. இந்த சிலை மீண்டும் புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து, இலகு குடமுழுக்கு நடைபெற்றது. புனித தீர்த்தங்களைக் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement