செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

08:30 PM Oct 12, 2024 IST | Murugesan M

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Advertisement

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

வயதான பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Advertisement

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அமைந்துள்ள பெருமாள் மலைக் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாள் மலையிலிருந்து பவானி, சித்தோடு வழியாக செல்லும் காவிரி ஆற்றின் அழகையும் பக்தர்கள் கண்டு ரசித்து சென்றனர்.

Advertisement
Tags :
last Saturday of the month of Puratasi.MAINsrirangamSrirangam Ranganathar temple
Advertisement
Next Article