புறப்பட்ட சில விநாடிகளில் வெடித்து சிதறிய ஜப்பானின் ராக்கெட் - காரணம் என்ன?
04:56 PM Dec 19, 2024 IST | Murugesan M
ஜப்பானின் கெய்ரோஸ் ராக்கெட் விண்ணில் ஏவிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.
ஜப்பானை சேர்ந்த, ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் கெய்ரோஸ் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது.
Advertisement
கடந்த மார்ச் 13ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட சில விநாடிகளில் தானாகவே வெடித்து சிதறியது. இதனால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், 2வது முறையாக ராக்கெட்டை ஏவிய போது சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது. இதனால் 2வது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
ராக்கெட்டின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பாதுகாப்பு கருதி அந்த ராக்கெட்டை வெடிக்கச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement