புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் - பிரதமர் மோடி பெருமிதம்!
உலகின் எதிர்காலம் போரில் அல்ல; அமைதியில்தான் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்பதாகவும், புலம்பெயர்ந்தோர் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதை தங்களது பொறுப்பாக கருதுவதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்தோர் ஆதரவு மற்றும் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்துவதில் அவர்களின் பங்கையும் அவர் பாராட்டினார்.
"உங்கள் அனைவரையும் சந்திக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பையும் ஆசீர்வாதங்களையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இன்று, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,
கடந்த 10 ஆண்டுகளில், நான் பல உலகத் தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன், அவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை பாராட்டுகிறார்கள். இதற்கு ஒரு பெரிய காரணம் நீங்கள் சுமந்து செல்லும் சமூக மதிப்புகள் தான்" என குறிப்பிட்டார்.
, உங்கள் வசதிக்கும் ஆறுதலுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். உங்கள் பாதுகாப்பும் நலனும் எங்கள் முன்னுரிமை. நெருக்கடியான சூழ்நிலைகளில், அவர்கள் எங்கிருந்தாலும், எங்கள் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவது எங்கள் பொறுப்பாக கருதுகிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.