புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழக ஐயப்ப பக்தர்கள் - பத்திரமாக மீட்ட NDRF வீரர்கள்!
02:15 PM Nov 22, 2024 IST
|
Murugesan M
கேரள மாநிலம் புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 17 ஐயப்ப பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் பம்பை வழியாக பயணிக்கும் நிலையில், புல்மேடு பாதை வழியாக சென்றால் நேரடியாக கோயில் சன்னிதானத்திற்கே செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் புல்மேடு வழியாக சபரிமலை செய்ய முயன்றுள்ளனர். இவர்களில் 17 பேர் காட்டுப்பகுதிக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், மீதமுள்ள பக்தர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் NDRF படையினர், காட்டில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்டனர்.
Advertisement
Next Article