செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

04:54 PM Nov 26, 2024 IST | Murugesan M

ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இளம் வீரர்களை வாங்கி குவிப்பதில் அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டின.

Advertisement

18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கும் நிலையில், அதற்கான 2-ம் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில், புவனேஷ்வர் குமாரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

அதேபோல் க்ருணால் பாண்டியாவை 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.  இந்திய வீரர் துஷார் தேஷ்பாண்டேவை 6 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. பஞ்சாப் அணி 7 கோடி ரூபாய்க்கு மார்கோ ஜான்சனை ஏலத்தில் எடுத்தது.

Advertisement

நிதிஷ் ராணாவை 4 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீரரான ஜோஸ் இங்கிலீஷை 2 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தன.

தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.  இளம் வீரர்களையே வாங்க பெரிதும் ஆர்வம் காட்டிய சென்னை அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது.

மேலும் குர்ஜப்நீத் சிங்கை 2 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல் பீகாரை சேர்ந்த 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

Advertisement
Tags :
IPL 2025.Royal Challengers Bangalore bought Bhuvneshwar Kumar for Rs 10.75 crore!
Advertisement
Next Article