புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் - விசாரணைக்கு ஆஜரானார் அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்ற விசாரணைக்கு ஆஜரானார்.
Advertisement
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண சென்ற நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிசையில் உளளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹைதராபாத் போலீஸார், அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இதனிடையே, நடிகர் அல்லு அர்ஜுனாவில் ஜாமீன் மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சஞ்சல்குடா மத்திய சிறையில் இரவு அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜூன், காலையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பலியான பெண்ணுக்கு நீதி கோரி போராட்டம் நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் அல்லு அா்ஜுன் வீட்டை ஞாயிற்றுக்கிழமை தாக்கினா். இதனால், அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். வழக்கு தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.