பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 290 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், ஏரியில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், மணலி, மணலி புது நகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.