செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போதைப்பொருள் விற்பனை - ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேர் கைது!

12:48 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னை அடுத்த பூந்தமல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் மூலம் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கரையான்சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

Advertisement

காவல் துறையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ கஞ்சா, ஆயிரத்து 400 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மனோஜ்குமார், ராஜ்குமார், விக்னேஷ், பிரதீப் மற்றும் அரிதர் ஆகியோரையும் கைது செய்தனர்.

Advertisement
Tags :
5 auto drivers arrestedChennaiKaraiyansavadi.MAINPoonamallee.selling drugs
Advertisement