செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பூந்தமல்லி அருகே குளிர்சாதனபெட்டி குடோனில் தீ விபத்து!

12:23 PM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பூந்தமல்லி அருகே உள்ள குளிர்சாதனபெட்டி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Advertisement

சென்னை பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாருக்கு சொந்தமான குளிர்சாதனபெட்டி குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியானது.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதனபெட்டிகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
ChennaiMAINmassive fire broke out at a refrigerator warehousePoonamallee.
Advertisement