பெஞ்சமின் நேதன்யாகுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
04:40 PM Dec 30, 2024 IST
|
Murugesan M
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக யாரிவ் லெனின் செயல்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 75 வயதான நிலையில் அடிக்கடி பல்வேறு உடல்நல பாதிப்புகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Advertisement
தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பூரண குணமடையும் வரை நீதித்துறை அமைச்சரான யாரிவ் லெனின் இஸ்ரேலின் தற்காலிக பிரதமராக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article