பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
11:12 AM Dec 26, 2024 IST
|
Murugesan M
பெண்களின் பாதுகாப்பு தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிமனிதனின் ஒழுக்கம் சீர்கெட்டு வருவதற்கு பாலியல் வன்கொடுமைகள் எடுத்துக்காட்டாக உள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
பெண்களின் பாதுகாப்பு தனிமனிதனின் ஒழுக்கத்தில்தான் உள்ளது என்றும், கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் கூறினார். மேலும், கொடிய மனம் படைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Advertisement
Next Article