செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு! : தவெக தலைவர் விஜய்

04:00 PM Nov 25, 2024 IST | Murugesan M

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும், மாநில அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட விஜய்,

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்ததை மேற்கோள்காட்டியுள்ளார்.

அந்த வகையில், தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துவதாக அந்தப் பதிவில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Tags :
Increase in violence against women! : Thaveka leader VijayMAINVijay
Advertisement
Next Article