பெண்களை தலிபான்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை! : மலாலா வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்களை தலிபான் ஆட்சியாளர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற யூசஃப் மலாலா வேதனை தெரிவித்தார்.
Advertisement
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 'இஸ்லாமிய நாடுகளில் பெண்களின் கல்வி நிலை' தொடர்பான மாநாட்டில் பங்கேற்று மலாலா பேசினார்.
அப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அடக்குமுறைக்கு ஆளாகும் பெண்களின் நிலைமையை சுட்டிக்காட்டிய அவர், பொதுவாழ்வில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் முற்றிலும் அகற்ற தலிபான்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.
இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான தலிபான்களின் அடக்குமுறையைக் கண்டித்து இஸ்லாமிய தலைவர்கள் அணிதிரள வேண்டுமெனவும் மலாலா வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்கள் கல்வி கற்க தடை விதித்ததுடன், அரசுப் பணியில் சேர்வதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.