செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் : தஞ்சாவூர் - மானாமதுரை நெடுஞ்சாலையில் உறவினகள் மறியல்!

04:41 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சிவகங்கையில் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement

காளையார்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த புதன்கிழமை மது அருந்திவிட்டு தனது மனைவி சத்யாவின் நகையை கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சத்யா மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சத்யாவின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டிய உறவினர்கள், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Advertisement

மேலும், உடலை வாங்க மறுத்து தஞ்சாவூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சத்யாவின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Doubt in the woman's death: Relatives picket on the Thanjavur-Manamadurai highway!MAIN
Advertisement