செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரம் : ஒருவர் கைது!

12:30 PM Apr 07, 2025 IST | Murugesan M

திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரத்தில் பள்ளி நண்பரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தோழியைத் தேடி வருகின்றனர்.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை சேர்ந்த ஹேமலதா என்பவர் கணவரைப் பிரிந்து வாழும் நிலையில், பிரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் கடம்பத்தூர் காவல் நிலையம் முன்பு தள்ளுவண்டி கடை நடத்தி வந்த நிலையில், அவர்களது கடையில் ஜுஸ் குடிக்க வந்த பள்ளி தோழி ஒருவருக்கும், ஜெயந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஜெயந்தன் வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்த ஹேமலதா அந்தத் தோழியைக் கடுமையாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளார்.

அங்கிருந்து அந்தப் பெண் தப்பிச் சென்ற நிலையில், அவரது செல்போனில் இருந்த கணவரது எண்ணைத் தொடர்பு கொண்டு நிர்வாண வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

மேலும், தனது வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றதாகவும், அதனைத் திருப்பித் தருமாறும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில், ஜெயந்தனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஹேமலதா, இரவு நேரத்தில் கேளிக்கை விடுதியில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே, ஹேமலதாவுடன் காவல் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதால் அவரைக் கைது செய்யாமல் போலீசார் தாமதப்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றமச்சாட்டியுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள ஹேமலதாவை கைது செய்யக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINWoman filmed naked: One arrested!திருவள்ளூர்
Advertisement
Next Article