பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை! - விழிப்புணர்வு நிகழ்ச்சி
04:19 PM Nov 26, 2024 IST | Murugesan M
சேலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நான்கு ரோடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் துவக்கி வைத்ததோடு, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
Advertisement
அப்போது, தவறான தொடுதல் உள்ளிட்டவை குறித்து மௌன மொழி நாடகம் வாயிலாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement