பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம் - மம்தாவிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாணவர்கள்!
10:51 AM Mar 28, 2025 IST
|
Ramamoorthy S
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
Advertisement
அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள மம்தா பானர்ஜி, லண்டனில் உள்ள கெல்லாக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது மம்தா பானர்ஜிக்கு எதிராக பதாகைகளை ஏந்திவந்த மாணவர்கள், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து முழக்கமிட்டனர்.
Advertisement
மேற்கு வங்கத்தில் இருந்து டாடா நிறுவனம் வெளியேறியது, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
Advertisement