பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடமலாக மீட்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
ஏமனூர் வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி யானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், யானையை கொன்று தந்தத்தை கடத்தியிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக விஜயகுமார், கோவிந்தராஜ், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பலரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அவ்வாறு கடந்த மாதம் 18-ம் தேதி அழைத்து செல்லப்பட்ட செந்தில் என்ற நபர் வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி புகாரளித்தார்.
இதன்பேரில் வனப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அழுகிய நிலையில் செந்திலின் உடல் மீட்கப்பட்டது. முக்கிய குற்றவாளி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வழக்கில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.